ஸ்பைசி ரைஸ் மற்றும் பீன்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி ரைஸ் - இரண்டு கோப்பை

நறுக்கிய வெங்காயம் - ஒரு கோப்பை

நறுக்கிய தக்காளி - ஒரு கோப்பை

பூண்டு - இரண்டு தேக்கரண்டி

துருவிய கேரட் - அரைக்கோப்பை

நறுக்கிய செலரி - அரைக்கோப்பை

நறுக்கிய குடைமிளகாய் - ஒரு கோப்பை

நறுக்கிய பச்சைமிளகாய் - இரண்டு

பீன்ஸ் கலவை - ஒரு கேன் 398ml

நறுக்கிய கொத்தமல்லி, பார்ஸ்லி - தலா ஒரு கைப்பிடி

பிரிஞ்சி இலை - இரண்டு

பட்டை - இரண்டு துண்டு

சிக்கன் ஸ்டாக் - நான்கு கோப்பை

சில்லி பவுடர் - இரண்டு தேக்கரண்டி

தனியா பவுடர் - ஒரு தேக்கரண்டி

சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் - கால் கோப்பை

செய்முறை:

கேனிலிருக்கும் பீன்ஸ்ஸை ஸ்ரெயினரில் ஊற்றி கழுவி வடிகட்டி வைக்கவும்.

அடிகனமான ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காயவைக்கவும். அதில் பட்டை பிரிஞ்சி இலையை போட்டு வதக்கவும்.

பிறகு வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், செலரி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.

அதன் பின்பு கழுவிய அரிசியுடன், உப்புத்தூள், மிளகாய்தூள், சீரகம் மற்றும் தனியாத்தூளைப் போட்டு கிளறிவிட்டு, குடைமிளகாய் மற்றும் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விடவும்.

ஸ்டாக் கொதிக்கும் பொழுது அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடிப் போட்டு வேகவிடவும்.

அரிசி அரைவேக்காடானவுடன் வடித்துவைத்துள்ள பீன்ஸ், கேரட், தக்காளி ஆகியவற்றைப் போட்டு மூடிப் போட்டு மேலும் பத்து நிமிடம் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள தழைகளை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: