ஸ்பைசி தக்காளி ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீரக சம்பா அரிசி - ஒரு கப்

நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பழுத்த தக்காளி - 4

கீறிய பச்சைமிளகாய் - 2

இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி

பச்சை பட்டாணி - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் பால் - 2 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

எண்ணெய் - 4 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெயும், நெய்யும் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

பின் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதங்கியதும் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும்.

பின் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் வதக்கி களைந்த அரிசியை போட்டு சிறிது நேரம் கைவிடாமல் கிளறவும்.

பின் தேங்காய்ப்பால், பட்டாணி, உப்பு போட்டு கலந்து மூடிப்போட்டு ஒரு விசில் வந்தவுடன் 7 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லி இலை தூவி தயிர் பச்சடியோடு பரிமாறவும்.

குறிப்புகள்: