ஸ்பைசி டொமேட்டோ ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1/4 கிலோ

வெங்காயம் - 2 (பெரியது)

அரிசி - 2 கப்

தேங்காய்ப்பால் - 4 கப்

மிளகாய்தூள் - 1 தேக்கரண்டி

கரம் மசால - 1 தேக்கரண்டி

தனியா - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

சோம்பு - சிறிது

பட்டை - சிறிது

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிது

கருவேப்பிலை - சிறிது

இஞ்சி,பூண்டு விழுது - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக்கொள்ளவும்.

பின் தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு கிளறவும்.

பின் இஞ்சி,பூண்டு விழுது போட்டு வதக்கி,வெங்காயம் போடவும் கருவேப்பிலை போட்டு மிளகாய்தூள்,கரம்மசாலா, தனியா,மஞ்சள்தூள்,உப்பு போட்டு கிளறி தக்காளியைப்போடவும்.

தக்காளி கொஞ்சம் வெந்ததும் அதில் அரிசியைப்போட்டு கிளறி தேங்க்காய்ப்பாலை ஊற்றி சட்டியை மூடி தீயைக்குறைத்து வேகவிடவும்.15 அல்லது 20 நிமிடத்தில் சாப்பாடு தயார்.கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: