ஸ்பேர் பார்ட்ஸ் ரைஸ் (கீரை சோறு)
தேவையான பொருட்கள்:
-----------------------
வேக வைக்க:
-----------------------
மட்டன் - கால் கிலோ
நுரையீரல் (பேப்சா) - 150 கிராம்
ஈரல் (கலீஜ்) - 100 கிராம்
கிட்னி - 100 கிராம்
மண்பத்தை - ஐம்பது கிராம்
தில் - இருபத்தைந்து கிராம்.
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரன்டி
வெங்காயம் - மூன்று
தக்காளி - மூன்று
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - மூன்று தேக்கரன்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரன்டி
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி, புதினா - கொஞ்சம்
வாழைக்காய் - ஒன்று
கேரட் - ஒன்று
கத்திரிகாய் - நான்கு
-------------------------
சோறு தயாரிக்க:
-----------------------
அரிசி - ஒரு கிலோ(அரை மணி நேரம் ஊற வைக்கவும்)
எண்ணெய் - அரை கப்
டால்டா - இரண்டு தேக்கரண்டி
பட்டை - இரண்டு அங்குல துண்டு
ஏலம் - இரண்டு
கிராம்பு - நான்கு
வெங்காயம் - இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - கால் கட்டு
பச்சை மிளகாய் - மூன்று
தேங்காய் - ஒன்று (பால் எடுத்து கொள்ளவும்)
அரை கீரை - ஒரு கட்டு
கடலை பருப்பு - அரை டம்ளர் உதிரியாக வேக வைக்கவும்
செய்முறை:
மட்டன் மற்றும் அனைத்து ஸ்பேர் பாட்ஸை நல்ல சுத்தம் செய்து வேக வைக்க கொடுத்துள்ள மசாலாக்களையும், காய்களையும் போட்டு குக்கரில் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
தேங்காய் பால் சோறுக்கு கொடுத்துள்ளவைகளை தாளித்து, ஒன்றுக்கு ஒன்றரை பங்கு தேங்காய் பால் ஊற்றவும்.
அரிசி களைந்து போட்டு முக்கால் வேக்காடு வெந்து கொண்டிருக்கும் போது வேக வைத்த மட்டன் கலவையை போட்டு கிளறவும்.
பிறகு வெந்த பருப்பு, கீரை ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கி அதையும் போட்டு மூடி போட்டு தீயை சிம்மில் வைத்து தம் போட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
நீண்ட நாள் பிணியாக இருந்து சரியானதும் இந்த கீரை சோறு செய்வார்கள்