ஸ்பெஷல் ஸ்பைசி அல்லது ஹெல்தி சாதம்
தேவையான பொருட்கள்:
குழைத்து வடித்த சாதம் - மூன்று கப்
கடுகு - கால் டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல் - மூன்று
பெருங்காயம் - இரண்டு பின்ச்
பச்சை மிளகாய் - ஐந்து
கருப்பு திராட்சை - கால் கப்
கடலைப்பருப்பு - கால் டீஸ்பூன்
இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு
தயிர் - இரண்டு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
கீரை(அல்லது)புதினா - கால் பிடி
உப்பு - தேவையான அளவு.
லெமன் ஜுஸ் - ஒரு டிராப்
மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
சாதத்தை நன்றாக குழைவாக வடித்து தயிர் மற்றும் உப்பு சேர்த்து அழுத்தி பிசைந்து கொள்ளவும்.
ஒரு பச்சை மிளகாய் தவிர மற்ற அனைத்து பச்சை மிளகாயையும் நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்கவிடவும்.
கடலைப்பருப்பு, பெருங்காயம் போட்டு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் போட்டு வறுத்து இஞ்சி போட்டு வதக்கவும்.
வதக்கியவற்றையும் திராட்சையையும் கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கிளறவும்.
கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் வைத்துள்ள மிளகாயை மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அரைத்தவற்றை போட்டு கிளறி பச்சை வாடை போனதும் எடுத்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
கீரையை நறுக்காமல் அதிக நீர் விட்டு வேக வைத்து எடுக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து கலந்து ஒரு டிராப் லெமன் பிழிந்து மிக்ஸ் பண்ணி கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
மிளகை மிக்ஸியில் ஒன்றும் பாதியுமாக பொடித்து கலந்து வைத்துள்ள சாதத்தில் கொட்டி கலக்கவும்.
குறிப்புகள்:
திராட்சையை கட் பண்ணக்கூடாது. முழுவதுமாகத்தான் போட வேண்டும். முழு மிளகுக்கு பதில் ரெடிமேட் மிளகு பொடி போடக்கூடாது.