ஸர்வாரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 250 கிராம்

கொண்டைக்கடலை - 100 கிராம்

சீரகம் - அரைத் தேக்கரண்டி

நெய் - 50 கிராம்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

இலவங்கம் - 4

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

கடலையை சமையல் சோடா சேர்த்து போதிய அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் எடுத்து கழுவி வேகவைத்துக் கொள்ளவும்.

அரிசியை நன்கு களைந்து கழுவி ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பிறகு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்தை பரப்பி உப்பைத் தூவவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், இலவங்கம் தாளித்து சாதத்தின் மேல் பரவலாகக் கொட்டவும்.

வேகவைத்த கடலையைச் சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி அடுப்பின் மேல் மேலும் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

குறிப்புகள்: