ஷெஸ்வான் சிக்கன் ப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்

போன்லெஸ் சிக்கன் - 100 கிராம்

முட்டை - 3

சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி

க்ரீன் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி

ரெட் சில்லி சாஸ் - ஒரு தேக்கரண்டி

டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி

அஜினமோட்டோ - 1/4 தேக்கரண்டி

மிளகு பவுடர் - ஒரு தேக்கரண்டி

உப்பு - சுவைக்கு

பட்டர் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கேரட் - 2

குடைமிளகாய் - ஒன்று

பீன்ஸ் - 10

ஸ்பிரிங் ஆனியன் - சிறு கட்டு

வெங்காயம் - ஒன்று

பூண்டு - 4 பற்கள்

செய்முறை:

சிக்கனை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சாதத்தை வேக வைத்து உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

காய்கள் மற்றும் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கிலும்

பூண்டை மிகவும் மெல்லியதாகவும் நறுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மெல்லியதாக நறுக்கிய பூண்டை போட்டு வாசனை வரும் வரை வதக்கவும்.

அதனுடன் நறுக்கிய வெங்காயம், ஸ்பிரிங் ஆனியனின் அடிப்பகுதியில் உள்ள வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும்.

பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு காய்களை எண்ணெயிலேயே வேக விடவும். அதன் பின்னர் சாஸ் வகைகள்

உப்பு, அஜினமோட்டோ சேர்த்து கிளறி விடவும்.

அதில் குடைமிளகாய் பாதியளவு வெங்காயத்தாள் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

இதனுடன் உதிர் உதிராக வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு எல்லா ஒன்றாக சேரும்படி கிளறவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட்டு பொரிய விடவும்.

பொரித்த முட்டை, வேக வைத்து நறுக்கிய சிக்கன், மிளகு தூள் மற்றும் மீதமிருக்கும் வெங்காயத்தாள் ஆகியவற்றை கலந்து வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்து அடுப்பை அதிக தணலில் வைத்து நன்கு பிரட்டி விடவும்.

குறிப்புகள்:

சிக்கன் 65 ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்