வொயிட் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - ஒரு கப்

காலிஃப்ளவர் - சிறியது ஒன்று

பட்டாணி - கால் கப்

பனீர் - 50 கிராம்

பேபி பொட்டேடோ - 10

பெரிய வெங்காயம் - 2

--------------------

தாளிக்க:

-------------------

சீரகம் - ஒரு தேக்கரண்டி

பட்டை - சிறு துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

பிரிஞ்சி இலை - 4

காரப்பொடி - 1 1/2 தேக்கரண்டி

கரம்மசாலா - ஒரு தேக்கரண்டி

எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை களைந்து ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி வைக்கவும். காலிஃப்ளவரை சிறு பூக்களாக நறுக்கி சிறிது உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

பனீரை எண்ணெயில் பொன்னிறமாக பொரிக்கவும்.

வெங்காயத்தை நீளத் துண்டுகளாக நறுக்கி சிறிதளவு எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் நான்கு தேக்கரண்டி எண்ணெய் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் சீரகம் பொரித்து ஏலம், கிராம்பு, பட்டை, ப்ரிஞ்சி இலை தாளிக்கவும்.

அத்துடன் காலிஃப்ளவர், பட்டாணி, தோல் நீக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சற்று கிளறவும்.

அதனுடன் காரப்பொடி கரம்மசாலா போட்டு நன்கு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் விட்டு அரிசியை சேர்த்து தேவையான உப்பு போட்டு குக்கரை மூடி வைக்கவும்.

ஆவி வந்ததும் வெயிட் போட்டு கேஸை சிம்மில் வைத்து பத்து நிமிடம் கழித்து அணைத்து விடவும். மேலும் பத்து நிமிடம் கழித்து குக்கரைத் திறந்து அதில் வதக்கிய பனீர், வெங்காயம் சேர்க்கவும். நன்கு கலக்கவும். மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

குறிப்புகள்:

அப்பளம், ரைத்தாவுடன் பரிமாறவும். எளிமையாக விரைவாக செய்யக் கூடிய புலாவ் .

இது. பேபி பொட்டேடோ இல்லாவிடில் பெரிய உருளைக்கிழங்கை நான்காக நறுக்கி சேர்க்கவும்