வேர்க்கடலை புலவு
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 2 கப்
நெய் - 5 மேசைக்கரண்டி
வேர்க்கடலை - ஒரு கப் (வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்)
தேங்காய் - ஒரு மூடி (துருவியது)
கிராம்பு - 2
பட்டை இலை - 2
வெங்காயம் - 3
குடமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேங்காய்த் துருவலை ஒரு மேசைக்கரண்டி நெய்யில் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும்.
அரிசியைக் கழுவி ஊறவைத்து, ஒரு மேசைக்கரண்டி நெய்யில் சிறிது வதக்கி எடுக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து மீதமுள்ள நெய்யைக் கொட்டி கிராம்பு, பட்டை, பட்டை இலையை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு வெங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், அரைத்த விழுதுகளைச் சேர்த்து வதக்கவும்.
அரிசியுடன் மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து, போதுமான உப்பும் கலந்து சாதமாக சமைக்கவும்.
சாதம் வெந்து பொலபொலவென்று வந்ததும் தீயை அணைத்து தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறவும்.
பிறகு வேர்க்கடலைப் பொடி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கிளறவும்.