வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - முக்கால் கப்
மஞ்சள் தூள் - சிறிது\
உப்பு - தேவையான அளவு
------------------------
வறுத்து பொடிக்க
----------------------------:
வேர்க்கடலை - அரை கப்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகாய் வற்றல் - 4
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - அரை தேக்கரண்டி
--------------------
தாளிக்க:
------------------
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
செய்முறை:
அரிசியை வேக வைத்து உதிரியாக சாதத்தைத் தயார் செய்து வைக்கவும். (மீந்து போன சாதம் இருந்தாலும் கூட பயன்படுத்தலாம்).
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.
வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை வறுக்கவும்.
பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர மற்ற அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு பிறகு அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து 2 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து பிரட்டி இறக்கவும்.