வெள்ளை உளுந்து சாதம்
தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி - ஒரு கப்
உருட்டு உளுந்து - கால் கப்
தேங்காய் - ஒரு மூடியில் பாதி அளவு
\கறுப்பு எள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 5 அல்லது 6 பல்
மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
-------------------
தாளிக்க:
----------------------
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
தேங்காயை துருவி வைக்கவும். பூண்டுப் பற்களை தோலுரித்து நீளவாட்டில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். வாணலியில் உளுந்துடன் வெந்தயத்தைச் சேர்த்து சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து ஊற வைக்கவும்.
ப்ரஷர் பானில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். அத்துடன் காய்ந்த மிளகாய் மற்றும் எள் சேர்த்து பொரியவிடவும்.
எள் பொரிந்ததும் தேங்காய் துருவலைப் போட்டு கிளறிவிட்டு பூண்டுப் பற்களைச் சேர்க்கவும்.
பிறகு வறுத்த உளுந்து வெந்தயம் மற்றும் அரிசி சேர்த்துக் கிளறிவிட்டு (அரிசியை நீரை வடித்துவிட்டு சேர்க்கவும்) மஞ்சள் பொடியைச் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ப்ரஷர் பானை மூடி 3 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
ப்ரஷர் பான் ஆறியதும் திறந்து உப்பு சேர்த்துக் கிளறவும். சுவையான உளுத்தம் பருப்பு சாதம் தயார்.
குறிப்புகள்:
நல்லெண்ணெயுடன் எள்ளுத் துவையல் அல்லது தேங்காய்த் துவையல் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
வற்றல், அப்பளம், கீரைப் பொரியல் மற்றும் அவியல் ஆகியவை இதற்கு பொருத்தமான சைட் டிஷ்.