வெரி ஈசி திடீர் சாம்பார் சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 1/2 கப்
துவரம்பருப்பு - 1/2 கப்
நறுக்கிய காய்கள் (கேரட், பீன்ஸ், பெங்களூர் கத்தரிக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பச்சைப்பட்டாணி, டபுள் பீன்ஸ்) - எல்லாம் சேர்ந்து 2 கப்
வெங்காயம் - 1
புளி - எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
முதலில் குக்கரில் வைக்கும் பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் விட்டு துவரம்பருப்பைப் போட்டு அடுப்பில் வைக்கவும்.
காய்களை நறுக்கி, புளி கரைத்து, வெங்காயம் வதக்கி -எல்லாம் ரெடி செய்யும் வரை துவரம்பருப்பு வெந்து கொண்டிருக்கட்டும்.
பிறகு அரிசியைக் களைந்து சேர்க்கவும்.
எண்ணையில் வதக்கிய வெங்காயம், நறுக்கிய காய்கறித்துண்டுகள், கரைத்த புளி, உப்பு, சாம்பார் பொடி சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி நெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
பச்சைக் கொத்தமல்லியைத்தூவிக் கிளறி மூடி வைக்கவும்.