வெந்தய சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

அரிசி - ஒரு கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 150 கிராம்

கொத்தமல்லி, புதினா - ஒரு கப்

பச்சைமிளகாய் - 8

தேங்காய் பால் - 2 கப்

நீர் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

நெய் - 100 கிராம்

பட்டை - 2

ஏலக்காய் - 4

கிராம்பு - 4

சின்ன வெங்காய விழுது - அரை கப்

தக்காளி - 7

வெங்காயம் - 3

செய்முறை:

வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுக்கவும்.

அரிசியை அரைமணி நேரம் ஊற விடவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு வாசனை பொருட்கள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன்னிறமானதும் சின்ன வெங்காய விழுது மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனதும் தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து குழைய வதக்கவும்.

பின்னர் தேங்காய் பாலும் தேவைக்கு நீரும் சேர்த்து (4 கப் அரிசி க்கு 2 கப் தேங்காய் பாலும் 6 கப் நீரும்) சேர்க்கவும்.

இது போல் நுரை பொங்கி வரும் போதே அரிசியை சேர்க்கவும். (கவனம் - கொதிக்க கூடாது. இல்லையேல் திரிந்தது போல் ஆங்காங்கே திட்டுதிட்டாய் பால் நிற்கும்)

அதிகமான தீயிலேயே அரிசியை வேக விடவும். பாதி நீர் வற்றியதும் உப்பு சேர்க்கவும். நீர் முக்கால் வாசி வற்றி படத்திலுள்ளது போல் ஆங்காங்கே கொப்பளித்து வரும் நேரத்தில் வெந்தயம் சேர்த்து ஒரு முறை கிளறவும்

பின்னர் தம்மில் 10 நிமிடங்கள் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதற்கு மீன் குழம்பு, பொரிச்ச மீன் மற்றும் புதினா துவையல் அருமையான காம்பினேஷன்.