வெந்தயக்கீரை சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை - 2 கப்

தக்காளி - 2 கப் (நறுக்கியது)

வெங்காயம் - 1 கப் ((நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

ஏலக்காய், பட்டை - ‍2

கிராம்பு - 4

மிளகாய்த்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் -‍ 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை ந‌ன்கு க‌ழுவி அரைம‌ணி நேர‌ம் த‌ண்ணீரில் ஊற‌விட‌வும்.

வாணலியில் 1/2 தேக்க‌ர‌ண்டி எண்ணெய் விட்டு, ப‌ட்டை, கிராம்பு, ஏல‌க்காய் போட்டு தாளித்து, அத‌னுட‌ன் ஊற‌வைத்த‌ அரிசியை (த‌ண்ணீரை வ‌டித்துவிட்டு) சேர்த்து சில‌ நிமிட‌ங்க‌ள் வ‌றுத்து எடுத்து வைக்க‌வும்.

மற்றொரு பாத்திரத்தில், மீத‌ம் உள்ள 1 1/2 தேக்கரண்டி எண்ணெயை போட்டு, சோம்பு தாளித்து, வெங்காய‌ம் சேர்த்து பொன்னிற‌மாகும்வ‌ரை வ‌த‌க்க‌வும். இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ப‌ச்சை வாச‌னை போகும்வரை வ‌த‌க்க‌வும்.

இந்த க‌ல‌வை ந‌ன்கு வ‌தங்கிய‌தும், உப்பு, அனைத்து தூள் வ‌கைக‌ளையும் சேர்த்து, நறுக்கிய த‌க்காளியையும் சேர்த்து, த‌ள‌த‌ள‌வென்று கொதிக்க‌விட‌வும்.

பின்ன‌ர் இதில், வெந்த‌‌ய‌க்கீரையையும், வ‌றுத்தெடுத்த‌ அரிசியையும் சேர்த்து, அரிசிக்கு இர‌ண்டு ம‌ட‌ங்கு த‌ண்ணீர் சேர்த்து வேக‌விட‌வும். பாத்திர‌த்தை இறுக‌ மூடி, மெல்லிய‌ தீயில் 20 நிமிட‌ங்க‌ள் வைக்க‌வும்.

சாதம் நன்றாக வெந்ததும் மெதுவாக கிள‌றிவிட்டு, கொத்த‌ம‌ல்லி தூவி க‌லந்து ப‌ரிமாற‌வும். வெங்காயப்ப‌ச்ச‌டி (அ) த‌யிர், சிப்ஸ் உட‌ன் சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும்.

குறிப்புகள்:

குக்க‌ரில் செய்வ‌தாக‌ இருந்தால், 2 விசில் விட்டு இறக்கிவிடலாம்.