வெண் பொங்கல்
தேவையான பொருட்கள்:
தரமான பச்சரிசி - 1 கப்
சிறுபருப்பு - 3/4 கப்
நெய் மற்றும் எண்ணெய் கலவை - 1/4 கப்
மிளகு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி - சிறு துண்டு
உப்பு - சுவைக்கு
முந்திரி - விருப்பமான அளவு
செய்முறை:
சிறுபருப்பை நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து விட்டு அரிசியை சேர்த்து வாணலியின் சூட்டிலேயே சற்று வறுத்துக்கொள்ளவும்.
சுமார் 5,6 டம்ளர் நீரை எலெக்ட்ரிக் குக்கர் பாத்திரத்தில் விட்டு நீர் கொதித்து வரும் பொழுது உப்பு, களைந்த அரிசி, பருப்பை சேர்க்கவும்.
அவ்வப்பொழுது கரண்டியால் கிளறி விடவும்.
அரிசி நன்கு மசிந்ததும் நீர் போதாவிட்டால் தேவையான அளவு இன்னும் சற்று நீர் சேர்த்துக் கொள்ளவும்.
குழிக்கரண்டியால் நன்கு மசித்து, கிளறி விடவும்.
அடுப்பில் சிறிய வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் கலவை விட்டு முந்திரியை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
மிளகு, சீரகம், பொடியாக அரிந்த இஞ்சி கறிவேப்பிலை இவற்றை அதே வாணலியில் தாளித்து பொங்கல் சூடாக இருக்கும் பொழுதே சேர்த்து கிளறி உடனே ஹாட் பாக்ஸில் வைத்து விடவும்.
குக்கரிலேயே கீப் வார்மில் வைத்து இருக்க கூடாது. அடி பிடித்து விடும்.