வெண்டைக்காய் சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்த சாதம் - ஒரு கப்

வெண்டைக்காய் - கால் கிலோ

பெரிய வெங்காயம் - ஒன்று

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

தனியா தூள் - ஒரு தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து

கறிவேப்பிலை - ஒரு கொத்து

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வெண்டைக்காயை நன்றாக கழுவி தண்ணீர் வடிந்ததும் பொடியாக அரிந்து கொள்ளவும்.

வெங்காயத்தையும் சிறிதாக அரிந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

கூடவே வெண்டைக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து அத்துடன் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் போட்டு உப்பும் போட்டு சிறு தீயில் வதக்கவும்.

கலர் மாறியதும் வேகவைத்த ஒரு கப் சாதத்தை போட்டு கொத்தமல்லித் தழையை தூவி 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: