வெண்டைக்காய் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் - ஒரு டம்ளர் (ஒரு ஆழாக்கு)
வெண்டைக்காய் - கால் கிலோ
நெய் - ஒரு தேக்கரண்டி (வெண்டைக்காய் வதக்க)
-----------------
தாளிக்க:
----------------------
எண்ணெய் + பட்டர் - நான்கு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - ஐந்து
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - இரண்டு பல்
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
முந்திரி - ஐந்து
தேங்காய் துருவல் - இரண்டு மேசைக்கரண்டி
வேர்கடலை - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வாயகன்ற வாணலியை காய வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரியை நறுக்கி போட்டு வறுத்து தனியாக வைக்க வேண்டும்.
அதே வாணலியில் வெண்டைக்காயை கழுவி ஒரு இன்ச் அளவு துண்டுகளாக தண்ணீரில்லாமல் போட்டு சிறிது உப்பு சேர்த்து நெய்யில் வதக்கி தனியாக வைக்க வேன்டும்.
உதிரியான சாதத்தையும் ரெடியாக வைக்க வேண்டும்.
இப்போது அதே வாணலியில் எண்ணெய் + பட்டரை போட்டு கறிவேப்பிலை, வேர்கடலை, சின்ன வெங்காயத்தை நான்காக நறுக்கி போடவும்., பூண்டு பொடியாக நறுக்கி போட்டு, தேங்காய் துருவல் இஞ்சி துருவி போட்டு வதக்கி பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
இப்போது முதலில் சாதம், அடுத்து வெண்டைக்காய் போட்டு நன்கு கிளறி இரண்டு நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.
கடைசியில் வறுத்த முந்திரி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
இது ஆபிஸுக்கு எடுத்து போக வசதியாக இருக்கும். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கட்டி கொடுக்கலாம்.