வெண்டைக்காய் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப்
வெண்டைக்காய் - 250 கிராம்
உப்பு - தேவைக்கு
---------------------------
தாளிக்க:-
--------------------------
கடுகு, உளுந்து, சீரகம் - தாளிக்க
கடலைபருப்பு - அனைத்தும் சேர்த்து 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - 2 மேசை கரண்டி
---------------------------------------
பொடிக்க:-
----------------------------------------
நிலக்கடலை - 3 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 ஸ்பூன்
பூடு - 6
வரமிளகாய் - 2
செய்முறை:
நிலக்கடலை வறுத்து தோலுரித்துக்கொள்ளவும். வரமிளகாயை வறுத்துக்கொள்ளவும்.
பின் அனைத்தையும் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
வெண்டைக்காயை பொரியலுக்கு போல் நறுக்கி 2 ஸ்பூன் எண்ணெயில் உப்புடன் சேர்த்து பிசிபிசிப்பு நீங்க வதக்கி தனியாக வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் வெண்டைக்காயை சேர்த்து நன்கு கிளறவும்
பின் சாதம் சேர்த்து கிளறி கடைசியில் நிலக்கடலை பொடி தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
பக்கோடா, மீன் வறுவல், சிக்கன் 65 ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு கொடுத்து விடுவதாக இருந்தால் தேங்காயை தவிர்க்கவும்.