வெஜ் ப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி ரைஸ் - 1 கப் (3/4 வேக்காடு வேகவைத்து எடுத்தது)

கேரட் - 1 டேபிள்ஸ்பூன் (நீளமாக நறுக்கியது)

பட்டாணி - 1 டேபிள்ஸ்பூன்

முட்டை கோஸ் - 1 டேபிள்ஸ்பூன் (நீளமாக நறுக்கியது)

குடமிளகாய் - 1/2 கப் (விதை நீக்கி நீளமாக நருக்கியது)

வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

அஜினோமோட்டொ - 1 சிட்டிகை

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்

சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்

எண்ணைய் - 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

சாதத்தை 1/2 மணி நேரம் ஆறவிடவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு நறுக்கிய காய்கறிகளை 4 நிமிடம் நன்கு வதக்கவும்.

அதனுடன் அஜினோமோட்டொ சேர்க்கவும்.

பின் தக்காளி சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு வதக்கி சாதத்தை சேர்த்து மீதி உள்ள எண்ணையை சேர்த்து நன்கு வதக்கவும்.

5 நிமிடம் கைவிடாமல் கிளரி இறக்கும் சமயம் உப்பு, மிளகுத்தூள் போட்டு இறக்கி பரிமாறலாம்.

குறிப்புகள்: