வெஜ் புலாவ்(குழந்தைக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

கேரட் - 1

பீன்ஸ் - 5

உருளை கிழங்கு - 1

பட்டானி - 1/4 கப்

ஏலக்காய்,கிராம்பு,பட்டை - 1

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

இஞ்சி,பூண்டு விழுது - 1/2 ஸ்பூன்

எண்ணை - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்களை பொடியாக நறுக்கவும்.

அரிசியை சிறிது நேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம்,மிளகாய் நறுக்கி வைக்கவும்.

குக்கரில் எண்ணை ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு வெங்காயம்,மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கி,காய்களை சேர்த்து நன்றாக வதக்கவும்.

ஊறவைத்த அரிசியை போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு குக்கரை மூடி 2விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்புகள்:

இதில் மசாலா எதுவும் சேர்க்காததால் குழந்தைகளுக்கு பிடிக்கும்.