வெஜ் பிரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - 2 குக்கர் கப்
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
நசுக்கிய பூண்டு- 4 அல்லது 5
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மெலிதாக நீளமாக நறுக்கிய வெள்ளை வெங்காயம் - 1/2 கப்
காம்புடன் நறுக்கிய காலிப்பிளவர் - 1/4 கப்
காம்புடன் நறுக்கிய ப்ரொக்கலி - 1/4 கப்
மெலிதாக நீளமாக நறுக்கிய முட்டை கோஸ் - 1/4 கப்
அஜினோமொடொ - 1 பின்ச்
நறுக்கிய குடைமிளகாய் - 1
சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
வெள்ளை மிளகுதூள் - 1 டீஸ்பூன்
மல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு
பட்டர் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
----------------------------------------------------
செய்முறை:
அரிசியை உதிரியாக வடித்து கொள்ளவும்
எண்ணெய் ,பட்டர் காயவைத்து அதில் பட்டை,கிராம்பு இட்டு வெடித்ததும் பூண்டு சேர்க்கவும்.அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
ஒரு டவாவில் குடைமிளகாயை மீடியமாக வதக்கி எடுத்து கொள்ளவும்.
காலிப்பிளவர்,ப்ரொக்கலி,முட்டை கோஸ் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்
அஜினோமொடொ சேர்க்கவும்.
காய்கறிகள் நன்கு வதங்கிய பின் சிறிது உப்பு சேர்க்கவும்.
குடைமிளகாயை சேர்க்கவும்.
காய்கறிகளின் தண்ணீர் வற்றியதும் தக்காளி சாஸ்,சோயா சாஸ் சேர்த்து 5 mins வதக்கவும்
எண்ணெய் சிறிது (2 ஸ்பூன்) சேர்க்கவும்.
வேகவைத்த சாதம், உப்பு, எலுமிச்சை சாறு,மிளகுத்தூள் ,மல்லி இலை போட்டு நன்கு கிளறி 5 நிமிடம் ஸ்ம்மில் வைக்கவும்
குறிப்புகள்:
காரம் அதிகம் தேவைப்படுபவர்கள் மிளகுத்தூள் இன்னும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
வேக வைத்த முட்டை இதற்கு நல்ல காம்பினேசன்