வெஜிடபுள் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - அரை கிலோ
தேங்காய் சிறியது - ஒன்று
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கேரட் + பீன்ஸ் (கலந்து) - கால் கிலோ பட்டாணி - 100 கிராம்
நெய் - ஒரு மேசைக்கரண்டி
தயிர் - ஒரு சிறிய கப்
புதினா, கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
----------------------------
தாளிக்க:
-----------------------
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 5
வெண்ணெய் (அ) எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
செய்முறை:
வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். கேரட், பீன்ஸை நறுக்கி வைக்கவும். அரிசியை களைந்து வைக்கவும்.
அரிசியை அளந்து ஒன்றுக்கு இரண்டு என்ற அளவில் தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, கேரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வேக விடவும்.
களைந்து வைத்துள்ள அரிசியை போட்டு கிளறி தேங்காய் பால் தயிர் சேர்த்து கிளறவும்.
அடுப்பை அதிக தீயில் ஐந்து நிமிடமும் சிறுந்தீயில் பத்து நிமிடமும் வைத்து கடைசியில் நெய் சேர்த்து இறக்கி புதினா, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.
குறிப்புகள்:
மட்டன் கிரேவி (அ) உருளை கிரேவியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.