வெஜிடபிள் பருப்பு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

பாசிப்பருப்பு - கால் கப்

துவரம்பருப்பு - கால் கப்

கேரட் - 2 ( நீளமாக நறுக்கியது )

பீன்ஸ் - 8 ( நீளமாக நறுக்கியது )

கோஸ் - சிறிதளவு ( நீளமாக நறுக்கியது )

ஊறவைத்த பட்டாணி - கால் கப்

வெங்காயம் - ஒன்று ( நீளமாக நறுக்கியது )

கீறிய பச்சை மிளகாய் - 2

தக்காளி - 2

தேங்காய் துருவல் - அரை கப்

சீரகம் - அரை தேக்கரண்டி

மிளகாய்தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு - 2 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை - கால் கப்

நெய் - 3 தேக்கரண்டி

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, மிளகாய்தூளை போட்டு வதக்கி காய்கறிகளை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

பின் களைந்த அரிசி, 2 1/2 கப் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மூடிப்போட்டு 3 விசில் வந்ததும் 4 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும்.

கடைசியில் நெய், கொத்தமல்லி இலை, எலுமிச்சைச்சாறு கலந்து சூடாக பூண்டு ஊறுகாய் வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: