வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பொடியாகவோ நீளமாகவோ நறுக்கிய கேரட் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - கால் கிலோ
பீஸ் - கால் கப்
கேப்சிகம் - 1/2
ஊற வைத்த பாசுமதி அரிசி - 3 கப்
தண்ணீர் - 4 அல்லது 5 கப்
பட்டை, ஏலம், கிராம்பு - ஒரு இன்ச்/2/2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 தேக்கரண்டி
சோயா சாஸ் - 3 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
நெய் - 4 தேக்கரண்டி
குருமிளகு பொடி - 2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கப்
செய்முறை:
முதலில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு காயவைத்து அதில் பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெடித்ததும் அதில் வெங்காயத்தை கொஞ்சமாக போட்டு சிவக்க வதக்கவும்.
தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை போட்டு மூடி விடவும். மிதமான தீயில் வைக்கவும்.
அரிசி பாதி அதாவது சுமார் 15 நிமிடம் வெந்ததும் தீயை அணைத்து விடவும்.
பின் வேறு ஒரு வாணலியில் மீதமுள்ள நெய்யை சூடாக்கி அதில் முதலில் நறுக்கின இஞ்சி, பூண்டு போட்டு வதக்கி பச்சை வாசனை போனதும் வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காய்கறிகளை கொட்டி உப்பு சேர்த்து வேக விடவும். உப்பை கொஞ்சம் பார்த்து போடவும்.
கடைசியில் சோயா சாஸ் சேர்ப்பதால் உப்பு கூடி விடும்.பின் காய்கறிகளை வதக்கி மூடியிட்டு வேக விடவும்.
வெந்ததும் அதில் குருமிளகு பொடி சேர்த்து வதக்கி பாதி வெந்த அரிசியில் கொட்டி கிளறி அரிசியை மூடி போட்டு மேலும் ஒரு 20 நிமிடம் மூடி வைத்தால் வெந்து இருக்கும்.
வெந்த சாதத்தில் கொத்தமல்லி இலை தூவி கிளறி சோயா சாஸ் கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதுவே நான்வெஜ்ஜில் செய்வதென்றால் இதனுடன் தனியாக பொரித்த சிக்கன் துண்டுகளும், பொரித்த செம்மீன் துண்டுகளும் சேர்த்து கிளறி வேகவிட்டு கடைசியில் 2 முட்டையை சிக்கி போட வேண்டும்.
நான்வெஜ் இன்னும் சுவையாக இருக்கும். குருமிளகை இன்னும் கூட்டி போட்டால் சுவையாக இருக்கும். தேவையென்றால் மஷ்ரூம் சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும்.