வெங்காய சாதம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நீளமாக அரிந்த வெங்காயம் - ஒன்றரை கப்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1

பொடியாக அரிந்த கொத்தமல்லி - கால் கப்

கறிவேப்பிலை - ஒரு ஆர்க்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

நெய் - 3 மேசைக்கரண்டி

கடுகு - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

உப்பு சேர்த்து வேகவைத்த சாதம் - 4 கப்

புளி - ஒரு சிறிய எலுமிச்சம்பழ அளவு

-------------------------

கீழ்க்கண்ட பொருள்களை சிறிது எண்ணெயில் வறுத்துப் பொடி செய்யவும்.

--------------------------------

தனியா - 2 ஸ்பூன்

வற்றல் மிளகாய் - 3

பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்

கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்

பட்டை - பெரியதாக ஒன்று,

கிராம்பு - 2

செய்முறை:

புளியை 2 கப் நீரில் அரை மணி நேரம் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயையும் நெய்யையும் ஊற்றி சூடாக்கவும்.

கடுகைப் போட்டு அது வெடித்ததும் வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

கரைத்த புளி நீரைச் சேர்த்து தகுந்த உப்பையும் சேர்த்து கெட்டியாகும் வரை சமைக்கவும்.

பிறகு பொடியைச் சேர்த்து கரைசலுடன் நன்கு கலக்கும்வரை குறைந்த தீயில் சில நிமிடங்கள் சமைக்கவும்.

கறிவேபில்லை, கொத்தமல்லி, புளிக்கரைசல் அனைத்தையும் சாதத்துடன் கலந்து சில நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும்.

குறிப்புகள்: