வாங்கி பாத் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/2 கி

கத்திரிக்காய் - 300 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சைமிளகாய் - 4

மஞ்சள் பொடி - 1 ஸ்புன்

சிரகம் - 1 ஸ்புன்

கரிவெப்பிலை - 1

தேங்காய் - 2 கப்

தனியா பொடி - 1/2 ஸ்புன்

கரம் மசாலா பொடி - 1/2 ஸ்புன்

முந்திரி - தேவையான அளவு

எண்ணை - 5 ஸ்புன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வானலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் சிரகம் போடவும்,

பிறகு வெங்காயத்தை பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், முந்திரியும் சேர்க்கவும். கத்திரிக்காயும் சேர்த்து வதக்கவும், அதில் கரம்மசாலவும் மஞ்சள் பொடி சேர்க்கவும் வதங்கியதும் கலைந்து வைத்திருக்கும் அரிசியை அதில் போட்டு வதக்கவும் , தீயை மிதமாக வைத்து வதக்கவும்.

பிறகு தண்ணீர் ஊற்றவும் ( அரிசி மேல் விரல்லவு தண்ணீர் இருக்கும் படி அளவோடு ஊற்றவேன்டும். அளவுகேர்ப்ப உப்பு போடவும்.

தனியாபொடி, கரிவேப்பிலை தேங்காய் துருவல் சேர்க்கவும்

அரிசி வெந்ததும் நன்றாக கிளரி விடவும் இரக்கும் போது எலும்மிச்சை சாரு ஊற்றி இரக்கவும்.

குறிப்புகள்:

கத்திரிக்காய் நீளவாக்கில் வெட்டி சமைக்கவும், சிக்கிரம் வேகுவது மட்டும் அல்லமல் சுவையும் நன்றாக இருக்கும். தீ லேசாக வைத்து சமைக்கவும்.