வாங்கி பாத் (1)
தேவையான பொருட்கள்:
உப்பு போட்டு உதிரியாக வடித்த சாதம் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - அலங்கரிக்க
---------------------------------------------
வறுத்து அரைக்க :
-----------------------------------------
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
மராட்டி மொக்கு - ஒன்று
எள்ளு - 2 தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
தனியா - 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
------------------------
தாளிக்க:
-----------------------------
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - கொஞ்சம்
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலை பருப்பு - அரை தேக்கரண்டி
நீளமான பச்சை கத்தரிக்காய் - 250 கிராம்
செய்முறை:
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றை அதன் வரிசையில் தாளிக்கவும். அதில் கடைசியில் கத்தரிக்காயை போட்டு வதக்கவும்.
தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி வைத்து கத்தரிக்காயை வேக விடவும். ரொம்பவும் குழைந்து விட கூடாது.
கத்தரிக்காய் முக்கால் பாகம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறவும்.
பொடி எல்லா காயிலும் பரவும் படி பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
ஆறிய உதிரியான சாதத்துடன் இந்த கலவையை போட்டு நன்கு பிரட்டினால் சுவையான வாங்கி பாத் ரெடி.