வாங்கி பாத்
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 1/2 கப்
கத்தரிக்காய் - 150 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
தனியாதூள் - கால் தேக்கரண்டிs
எலுமிச்சை பழம் - அரை மூடி
முந்திரி - 6
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். கத்தரிக்காய் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். அரிசியைக் களைந்து வைக்கவும்.
வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு
சிவந்ததும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கத்தரிக்காய், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள், தேங்காய் துருவல் மற்றும் முந்திரி சேர்த்து வதக்கவும்.
5 நிமிடங்கள் கழித்து நீர் வடித்த அரிசியைப் போட்டு மெல்லிய சூட்டில் 5 நிமிடங்கள் கிளறவும்.
பிறகு உப்பு சேர்த்து சூடான நீரை ஊற்றி வேகவிடவும். 10 - 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைத்து இறக்கி எலுமிச்சைபழ சாற்றை பிழியவும்.
சுவையான வாங்கி பாத் தயார்.