வறுத்த தேங்காய் துருவல் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 1/2 கப்

அரிசி - 1 கப்

சின்ன வெங்காயம் - 7

கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

உப்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 15

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி உப்பு சேர்த்து தண்ணீருடன் வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.

அகன்ற பாத்திரத்தில் எண்ணெய்விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

சின்ன வெங்காயம் கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவக்க விடவும்.

அத்துடன் தேங்காய் துருவல், முந்திரிப்பருப்பு போட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு வேகவைத்துள்ள சாதத்தை அதில் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

அதில் நெய் ஊற்றி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: