வறுத்த சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 2 கப்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

கடுகு - 1/2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாக நறுக்கவும்.

பூண்டை தோல் நீக்கி நசுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கிய பின் சாதம், உப்பு தூள் சேர்த்து கிளறி அடுப்பை சிம்மில் வைத்து அவ்வப்போது கிளறி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

குறிப்புகள்: