வரகரிசி பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1/2 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

முந்திரி - 5

இஞ்சி - 1 துண்டு

கறிவேப்பிலை - கொஞ்சம்

பெருங்காயம் - சிறிது

நெய் - 2 மேஜைக்கரண்டி

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வரகரிசி, பாசிபருப்பை சுத்தம் செய்து குக்கரில் 2 1/2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து 1 விசில் வி்ட்டு 15 நிமிடம் சிறு தீயில் வைத்து எடுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகம், முந்திரி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பெருங்காயம் சேர்த்து எடுக்கவும்.

சூடாக தாளிப்பை பொங்கலில் கலந்து நெய் விட்டு கிளறிவிடவும்.

குறிப்புகள்:

பொங்கலில் நெய் தாளிப்பில் பயன்படுத்தினால் அதிகம் தேவைப்படும், வாசமும் இருக்காது. இது போல கடைசியில் சேர்த்தால் நெய் வாசமும் இருக்கும், அதிக நெய் இல்லாமல் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.