வண்ணமிகு எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
எலுமிச்சை பழம் - 2
சிறிய கேரட் - 1
பச்சை பட்டாணி - 1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சிறிய வெங்காயம் - 4
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
வறுத்த நிலக்கடலை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்துமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்.
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து உப்பு போட்டு வைக்கவும்.
கேரட்டை மெல்லியதாக துருவவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து வைக்கவும். (பிஞ்சாக இருந்தால், எண்ணெயில் வதக்கும் பொழுதே வெந்து விடும்).
வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாயை வட்டமாகவும் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை சேர்த்து, சிவந்ததும், நறுக்கிய வெஙகாயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், மஞ்சள் தூள், கேரட், பட்டாணி சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின் எலுமிச்சம் பழச்சாறில் கொட்டி கலக்கவும்.
ஆறிய சாதத்தையும் கொட்டி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
குறிப்புகள்:
விருப்பப்பட்டவர்கள் 3 பல் பூண்டை நீளமாக, மெல்லியதாக நறுக்கி வதக்கும் பொழுது சேர்த்து கொள்ளலாம்.