லெமன் ரைஸ் (2)
தேவையான பொருட்கள்:
பச்ச அரிசி - ஒரு கப்
எலுமிச்சை சாறு - மூன்று டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
பச்சைமிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
------------------------------------------
பொடிக்க
-----------------------------------------
காய்ந்த மிளகாய் - மூன்று
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
தனியா - அரை டீஸ்பூன்
-----------------------------------------------
தாளிக்க
---------------------------------------------
எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
முந்திரி - நான்கு (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
சாதத்தை சிறிது உப்பு சேர்த்து உதிரியாக வடித்து ஆற விடவும்.
பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ள வேண்டும்.
எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய முந்திரி போட்டு தாளிக்கவும். அதில் இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை பொடியாக நறுக்கி போட்டு பெருங்காயத்துளை சேர்க்க வேண்டும்.
பிறகு உப்பு, மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
இறக்கி ஆறிய சாதத்தில் கலந்து, பொடித்த பொடியை அதில் போட்டு நன்கு கலந்து இறக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு தொட்டுக்கொள்ள வெஜிடேரியனாக இருந்தால் பீன்ஸ் பருப்பு உசிலி, கலவை பருப்பு வடை. நான் வெஜ் ஆக இருந்தால் மட்டன் பிரை, சிக்கன் பிரை செய்து கொள்ள வேண்டியது.