லெமன் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரை படி
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3/4 படி
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அரிசியை கழுவி 2 ஸ்பூன் உப்பு சேர்த்து 3/4 படி தண்ணீருடன் பதமாக வேகவைத்து, ஆப்பையால் பொலபொலவென்று உதிர்த்துவிட்டுக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவக்கவிடவும்.
அத்துடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு எலுமிச்சைச்சாறு, மீதி உப்பை சேர்க்கவும்.
பிறகு வேகவைத்துள்ள சோறை அதில் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
எலுமிச்சை ஊறுகாய் மற்றும் பொரித்த கோழி அல்லது பொரித்த பீஃப் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.