லெமன் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு கப்
எலுமிச்சம் பழம் - 1 என்னம் (பிழிந்து ஜூஸ் எடுக்கவும்)
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
கேரட் - 2 டீஸ்பூன் (மிகவும் பொடியாக நறுக்கியது)
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2 என்னம்
கறிவேப்பிலை - 1 இனுக்கு (பொடியாக நறுக்கியது)
எண்ணைய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாணலியை காயவைத்து எண்ணைய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து கடலைபருப்பை போடவும்.
அதனுடன் கேரட்டை ஒரு வதக்கு வதக்கி பின் கறிவேப்பிலை சேர்த்து சிவப்பு மிளகாயை கிள்ளி போடவும்.
அடுப்பை அணைக்கும் முன் மஞ்சள் பொடியை போட்டு ஒரு கலக்கு கலக்கவும்.
பின் சாதத்தில் பிழிந்து வைத்துள்ள ஜூஸை பரவலாக ஊற்றவும்.
அதனுடன் தாளித்தவைகளை கொட்டி நன்கு கலக்கவும்.
சுவையான கேரட் சேர்த்த லெமன் சாதம் ரெடி.
குறிப்புகள்:
இதனுடன் தொட்டுக் கொள்ள கத்தரிக்காய் புளி கூட்டு மிகவும் சுவையாக இருக்கும்.