லென்டில் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை நிற லென்டில் - இரண்டு கோப்பை

லாங் கிரன் ரைஸ் - ஒரு கோப்பை

வெங்காயம் - ஒன்று

பூண்டு - இரண்டு பற்கள்

நறுக்கிய கொத்தமல்லி - ஒரு பிடி

சில்லி ஃபிளேக்ஸ் - அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி

உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி

பிரிஞ்சி இலை - இரண்டு

நறுக்கிய குக்கும்பர் பிக்கில் - அரைக்கோப்பை

ஆலிவ் ஆயில் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு நெத்தாக வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

அடிகனமான சட்டியில் எண்ணெயை ஊற்றி வெங்காயம், பூண்டைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து சில்லி ஃபிளேக்ஸும், பிரிஞ்சி இலையும் போட்டு வதக்கி பருப்பிற்கு மூன்று மடங்கு அளவிற்கு தண்ணீரை அளந்து ஊற்றி உப்பைச் சேர்த்து கொதிக்க விடவும்.

பிறகு அதில் பருப்பை போட்டு அடுப்பின் அனலைக் குறைத்து மூடியைப் போட்டு வேகவிடவும்.

பருப்பு நன்கு வெந்தவுடன் வேகவைத்துள்ள சோற்றைப் போட்டு நன்கு கிளறி விட்டு ஒரு பத்து நிமிடத்திற்கு அடுப்பை சிம்மில் வைத்து விடவும்.

பிறகு மிளகுத்தூளையும், பிக்கிலையும் சேர்த்து இலேசாக கிளறி விட்டு இறக்கி கொத்தமல்லியைத்தூவி சூடாக பரிமாறவும்.

இந்த சுவையான சத்து நிறைந்த லென்டில் ரஸ் மத்திய உணவிற்கு எடுத்துச் செல்ல ஏற்ற உணவாகும்.

குறிப்புகள்: