ரைஸ் கோஃப்தா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சாதம் - 1 கப்,

கேரட் - 1,

பீன்ஸ் - 5,

கார்ன் ஃப்ளார் மாவு - 3 + 2 மேசைக்கரண்டி,

பெரிய வெங்காயம் - 2,

சோயா சாஸ் - 2 + 2 தேக்கரண்டி,

இஞ்சி - 1 துண்டு,

பூண்டு - 6 பல்,

பச்சை மிளகாய் - 6,

கொத்தமல்லி தழை - சிறிது,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சாதத்தை நன்கு மசித்து கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.

சாதத்துடன் 3 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவு, நறுக்கிய காய்கள், 2 ஸ்பூன் சோயா சாஸ், அரைத்த விழுதில் சிறிது, உப்பு, சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மீதி சோயா சாஸ், உப்பு, சேர்த்து வதக்கவும்.

2 ஸ்பூன் கார்ன் ஃப்ளார் மாவை 2 கப் தண்ணீரில் ஊற்றி கலர் சேர்க்கவும். 5 நிமிடம் கொதிக்க விட்டு, நன்கு கிரேவி போல் ஆனதும் இறக்கவும்.

பரிமாறும் முன் கோஃப்தாக்களை சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்:

ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்றவற்றுக்கு பொருத்தமான ஜோடி.