ரிச் ப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - அரை கப்
முந்திரி - 4
பாதாம் - 4
பிஸ்தா - 6
திராட்சை - 6
பட்டை - சிறு துண்டு
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
ஆப்பிள் - சிறிது
பப்பாளி - சிறிது
பைனாப்பிள் - சிறிது
வெங்காயம் - 1/4
கேப்ஸிகம் - 1/4
கேரட் - சிறிது
தேங்காய் பால் - 3/4 கப்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நட்ஸ் வகைகளை தட்டி வைக்கவும். பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கவும். வெங்காயம்
கேரட், கேப்ஸிகம் நறுக்கி வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து பின் பொடித்த நட்ஸ் வகைகளை சேர்த்து வதக்கவும்.
அதில் நறுக்கின வெங்காயம், கேப்ஸிகம், கேரட் சேர்த்து பிரட்டவும்.
பின் தண்ணீர் இல்லாமல் வடித்த அரிசியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி உப்பு சேர்க்கவும்.
இதில் நறுக்கிய பழங்கள் சேர்த்து கிளறி விடவும்.
கடைசியாக தேங்காய் பால் சேர்த்து கொதி வந்ததும் சிறுந்தீயில் மூடி போட்டு வேக விடவும்.
முக்கால் பாகம் வெந்ததும் தம் போட்டு வேக விடவும். நல்ல சத்தான ரிச்சான சாதம் இது. பழங்களின் இனிப்பு சுவையே போதுமானது. விரும்பினால் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம்.