ரவா பொங்கல்
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
பாசிபருப்பு - 1/2 கப்
பால் - 1 கப்
தண்ணீர் - 4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சிவப்பு அல்லது பச்சைமிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ப்ரசர் குக்கரில்முதலில் பாசிபருப்பை வாசம் வரும்வரை வெறும் வாணலியில் வறுக்கவும்.
அரைமணிவரை அதை சுடுநீரில் ஊறவைக்கவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி அதில் ஊறிய பருப்பை போட்டு ஐந்துநிமிடம் கொதிக்கவிட்டு உப்பு சேர்த்து கிளறி பின் ரவையை சேர்த்து மிதமான தீயில் கட்டியில்லாமல் கிளறவும்.
நீர் வற்றி பிடிக்கும் தருவாயில் பாலை ஊற்றி சிம்மில் வைத்து கிளறி பால்
முழுதும் பொங்கலில் இழுத்து வற்றும் வரை கிளறி மூடவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி ,மிளகு,சீரகம் ,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
வறுத்தவற்றை வெந்த ரவா பொங்கலில் கொட்டி கிளறவும்.
குறிப்புகள்:
ப்ரஷர் குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைத்து வேகவிட்டும் எடுக்கலாம்