மோர்க்குழம்பு கதம்ப சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
காய்கறிகள் - 2 கப் (அவியலுக்கு நறுக்குவது போல)
கடலைமாவு - ஒரு மேசைக்கரண்டி
தண்ணீர் - ஒரு கப்
காராச்சேவை - 100 கிராம்
வடை - விருப்பத்திற்கேற்ப
தயிர் - ஒரு கப் (கரைத்தது)
புளி விழுது - 2 தேக்கரண்டி
-----------------------------
தாளிப்பதற்கு:
-------------------------------
கடுகு - ஒரு தேக்கரண்டி
மிளகாய்வற்றல் - 2
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
துவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரைத் தேக்கரண்டி
சீரகம் - அரைத் தேக்கரண்டி
பெருங்காயம் - பட்டாணி அளவு
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - அரைத் தேக்கரண்டி
செய்முறை:
அரை கப் உளுத்தம்பருப்பை ஊற வைத்து (தோல் பருப்பு மிக ருசியாக இருக்கும்) கரகர வென்று அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, மிகச் சிறிய வடைகளாக தட்டிப் பொரித்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு மேற்கண்ட பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.
புளியை 2 கப் தண்ணீரில் கலந்து விட்டு காய்கறி, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு வேக வைக்கவும்.
வெந்த காய்களுடன் தயிர் கலவையைக் கலந்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கி வைத்து காராசேவை, பொரித்த வடைகளை கலந்து, நெய் ஊற்றிப் பரிமாறவும்.