மோத்தி புலாவ
தேவையான பொருட்கள்:
மட்டன் கைமா - 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
இஞ்சி - ஒரு துண்டு
மல்லி, புதினா - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலாத் தூள் - ஒரு ஸ்பூன்
நெய் - 9 ஸ்பூன்
தயிர் - ஒரு கப்
பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை - தேவைக்கு
மிளகு - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிது
பாதாம் பருப்பு - 25 கிராம்
பிஸ்தா பருப்பு - 25 கிராம்
முந்திரி பருப்பு - 25 கிராம்
கிஸ்மிஸ் - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
மட்டன் வெந்த நீர் - 2 கப்
செய்முறை:
கீமா, இஞ்சி, மல்லி, புதினா, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும்.
அதனுடன் கரம் மசாலாத் தூள், ஒரு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் தயிர், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இதனை சிறு பட்டாணி அளவு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.
ஒரு கப் நீரில் மீதி தயிரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து 4 ஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், அடித்த தயிரை ஊற்றி கொதிக்க விடவும்.
பின்பு மட்டன் உருண்டைகளை அதில் போட்டு வேக விடவும்.
சிறு தீயில் நீர் முழுவதும் வற்றி மட்டன் உருண்டைகள் நன்கு வெந்ததும் அவற்றை ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி நான்கு ஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலம், பிரிஞ்சி இலை, மிளகு போட்டு தாளித்து அரிசியையும் போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.
பின்பு மட்டன் வெந்த நீருடன் 1/2 கப் நீர் சேர்த்து மஞ்சள்பொடி, உப்பு சேர்த்து சிறுதீயில் வேக விடவும். அரிசி வெந்ததும் இறக்கி வைத்து மட்டன் உருண்டைகள், வறுத்தபருப்பு வகைகள், கிஸ்மிஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.