மேத்தி கார்ன் புலாவ் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மேத்தி - 1 கட்டு

ஸ்வீட் கார்ன் - 1 ஒரு கப்

வெங்காயம் - 2

அரிசி - 2 ஒரு கப்

தக்காளி - 2

தயிர் - 1/2 ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள் - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு - தாளிக்க

எண்ணெய் (அ) நெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி தழை - அலங்கரிக்க

செய்முறை:

கடாயில் எண்ணெய் காய்ந்ததும் மசாலா பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.

பொரிந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசம் போகும்வரை வதக்கவும்.

பிறகு நீளமாக அறிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி எல்லா தூளையும் சேர்க்கவும்.

ஒரு கிளறு கிளறி மேத்தி இலை மற்றும் கார்னை சேர்க்கவும். தயிர் சேர்த்து வதக்கவும்.

5 நிமிடம் வதக்கி ஊறவைத்த அரிசியை சேர்த்து கிளறவும்.

அரிசி சிறிது வறுபட்டதும் 4 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவும்.

குறிப்புகள்: