மேதி ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - ஒரு ஆழாக்கு (200 கி)
வெந்தயக்கீரை - ஒரு கைப்பிடி
வெங்காயம் - ஒன்று (பெரியது)
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3 அல்லது 4
பட்டை, லவங்கம் - தாளிக்க
ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - அரை மூடி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
வெந்தயக் கீரையை அலசி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பாசுமதி அரிசியை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை
லவங்கம் தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெந்தயக் கீரை சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வதக்கவும்.
இப்போது ஊற வைத்திருக்கும் அரிசியை சேர்த்து ஒரு கிளறு கிளறி
அதனுடன் ரசப் பொடியை சேர்க்கவும்.
பின்னர் 1 1/4 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். ஒரு விசில் வந்ததும் 2 நிமிடங்கள் சிம்மில் வைத்து குக்கரை நிறுத்தவும். சமைக்கும் நேரம் குக்கரைப் பொறுத்து மாறுபடும்.
ஆவி அடங்கியதும் அரை மூடி எலுமிச்சம் பழம் சேர்த்து கிளறி பரிமாறவும்
குறிப்புகள்:
இதனுடன் குருமா, ரைத்தா, பனீர் பட்டர் மசாலா நன்றாக இருக்கும்.