மெக்சிகன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டைக்கோஸ் - 50 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - ஒன்று

குடைமிளகாய் - ஒன்று

பூண்டு - 2 பல்

மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

நெய் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரிசி - ஒரு கப்

செய்முறை:

முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும்

மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும்

குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.

பானில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டை போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறியதும் அதை எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் போட்டு அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆன் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பானில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கி நிறம் மாறியதும் எடுத்து வைக்கவும்.

அதே பானில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைக்கோஸை போட்டு வதக்கி எடுக்கவும்.

மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து மிளகாய்த் தூள்

உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.

காய் வதங்கியதும் இறக்கி வதக்கிய வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி பரிமாறவும்.

குறிப்புகள்: