முளைப்பயிறு ஃப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
முளை கட்டிய பாசிப்பயிறு - 2 கைப்பிடி
காய்ந்த மிளகாய் - 6
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
கேரட் - 1
முட்டைக்கோஸ் துருவல் - 1 கைப்பிடி
குடைமிளகாய் - 1
வெங்காயத் தாள் - 4
அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 4 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
மிளகாயையும், பூண்டையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
வெங்காயம், கேரட், குடைமிளகாய் எல்லாவற்றையும் சன்னமாக, நீளமாக நறுக்கவும்.
வெங்காயத் தாளை பொடியாக நறுக்கவும். அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம், கேரட், கோஸ், குடை மிளகாய், முளை கட்டிய பயிறு என வரிசையாக சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அஜினமோட்டோ, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு ஆறிய சாதத்தையும் கொட்டி, நறுக்கிய வெங்காயத் தாள், உப்பு சேர்த்து, சாதம் நன்கு சூடேறும் வரை அடுப்பில் வைத்து கிளறி இறக்கவும். (தணல் குறைவாக இருக்க வேண்டும்).