முளைபயிறு பிரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - கால் கிலோ,

நறுக்கிய வெங்காயத்தாள் - ஒரு கப்,

முளைக்கட்டிய பயறு - அரை கப்,

குடமிளகாய், முட்டைகோஸ் - கால் கப்,

வெள்ளை மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,

சோயா சாஸ் - 3 டீஸ்பூன்,

அஜினமோட்டோ - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

-------------------------------

அரைத்துக்கொள்ள:

-------------------------------

பச்சை மிளகாய் - 2,

இஞ்சி - அரை துண்டு.

செய்முறை:

அரிசியைக் கழுவி வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பச்சை மிளகாய் - இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும்.

சர்க்கரை, குடமிளகாய், முட்டைகோஸ், முளைப்பயறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அஜினோமோட்டோ சேர்க்கவும்.

கடைசியில் வெங்காயத்தாள், உப்பு, சாதம், சோயா சாஸ் சேர்த்து, அடுப்பை பெரிய தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.

குறிப்புகள்: