முத்துப் புலவு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - அரை கிலோ

உப்பு - 4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

இஞ்சி - 10 கிராம்

பூண்டு - பாதி

பட்டை - 2

கிராம்பு - 2

பெருஞ்சீரகம் - சிறிது

பிரிஞ்சி இலை - சிறிது

நெய் - 100 கிராம்

ரவை - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 4 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

தேங்காய்ப்பால் - ஒன்றரை கப்

செய்முறை:

ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு அதை குளிர்ந்த தண்ணீரில் 2 மணி நேரம் ஊற விடவும்.

அதை ஆவியில் வேக விட்டு எடுக்கவும். முந்திரிப்பருப்பை பொடி செய்யவும்.

இஞ்சி, பூண்டு, பெருஞ்சீரகத்தை ஒன்றாக சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கவும்.

பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி தேங்காய்ப்பால் ஊற்றி கொதிக்க விடவும்.

எல்லாம் சேர்த்து கொதித்ததும் ரவையைக் கொட்டிக் கிளறி விட்டு 10 நிமிடம் கழித்து வெந்த ஜவ்வரிசி போட்டு முந்திரிப் பருப்பு தூளைப் போட்டு நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

இதுவே முத்துப்புலவு. இதை வெஜிடபுள் சாலட்டுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்புகள்: