முட்டைக்கோஸ் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1/4 கிலோ

முட்டைக்கோஸ் - 200 கிராம்

தேங்காய் பால் - 1 டம்ளர்

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 2

பச்சை மிளகாய் - 3

இஞ்சி - சிறிது

பூண்டு - 5 பல்

தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி

பட்டை - சிறிது

கிராம்பு - 2

ஏலக்காய் - 2

நெய் - 2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி.

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முட்டைக்கோஸ், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

மிளகாயை இரண்டாக கீறவும்.

இஞ்சி, பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும்.

குக்கரில் நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.

வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வத்ங்கிய பின் அரைத்த விழுது சேர்த்து, வாசம் வரும் வரை வதக்கவும்.

முட்டைக்கோஸ், தக்காளி சேர்த்து வதக்கி, தேங்காய் பால், தண்ணீர், உப்பு, அரிசி சேர்த்து, மூடி, 1 விசில் விட்டு, 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் பாலும் தண்ணீரும் சேர்த்து, அரிசிக்கு 2 மடங்கு வருமாறு பார்த்துக் கொள்ளவும்.