முட்டைகோசு சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - ஒரு டம்ளர்

தேங்காய் - 1 மூடி

பொரிகடலை - 3 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 6

இஞ்சி - ஒரு துண்டு

பெரிய வெங்காயம் - 1

முட்டைகோஸ் - கால் கிலோ

எண்ணெய் - 4 தேக்கரண்டி

கடுகு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி

உப்பு - 3 தேக்கரண்டி

செய்முறை:

சாதத்தை குழைவாய் இல்லாமல் சற்று விறைப்பாய் வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். முட்டைகோசினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

துருவிய தேங்காய், பொரிகடலை, பச்சைமிளகாய், உப்பு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பினைப் போட்டுத் தாளித்து கொள்ளவும்.

அதன்பிறகு, நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயத்தினை வாணலியில் போட்டு நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுதினையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.

நன்கு சிவந்து வறுபட்டவுடன் அதில் ஆற வைத்துள்ள சாதத்தினைக் கொட்டிக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்புகள்: