மீன் புலாவ்
தேவையான பொருட்கள்:
மீன் - 150 கிராம்
அரிசி - 300 கிராம்
துருவிய தேங்காய் - 3 மேஜைக்கரண்டி
தேங்காய்ப்பால் - 150 மில்லி
பச்சை மிளகாய் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - 2 மேஜைக்கரண்டி
நெய் - 50 கிராம்
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மீனை சுத்தப்படுத்தி, சிறிது மஞ்சள் தூள் கலந்து பிசிறி வைக்கவும்.
அரிசியை கழுவி, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அரிசி, மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து பதமாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.
துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், மீதி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கிய பின், மீன் துண்டங்களைப் போட்டு புரட்டி சிறிது நீர் விட்டு வேக விடவும்.
மீன் உடையாமல் வெந்து, சிறிது கிரேவி இருக்கும் போதே இறக்கவும்.
அகலமான பாத்திரத்தில் பாதி சாதத்தை போட்டு சமப்படுத்தி பாதி தேங்காய்ப்பாலை ஊற்றவும். அதன் மேல் மீன் கிரேவியை பரவலாக ஊற்றவும்.
மீதமுள்ள சாதத்தைப் போட்டு, மீதியுள்ள தேங்காய்ப்பால், நெய்யை ஊற்றி சமப்படுத்தி கொத்தமல்லி தழை தூவி இறுக மூடி, 15 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும். பரிமாறும் முன்பு மீன் உடையாமல் கலந்து பரிமாறவும்.